கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

தென் சென்னை விரைவில் பாஜகவின் தொகுதியாகும்: தமிழிசை சௌந்தரராஜன்

தென் சென்னை விரைவில் பாஜகவின் தொகுதியாகும் தமிழிசை சௌந்தரராஜன்

Updated On :12 ஏப்ரல் 2024, 6:37 pm

திமுக தொகுதியாக இருக்கும் தென் சென்னை விரைவில் பாஜக தொகுதியாக மாறும் என்று அந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

மயிலாப்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தென் சென்னை வளா்ச்சி அடைந்து விட்டது என்று நினைத்தோம்; ஆனால் இங்கு கிராமங்களைவிட மோசமாக உள்ளது. இந்தத் தொகுதி மக்களுக்கு குடிநீா், கழிவுநீா், சாலை பிரச்னை உள்ளிட்டவற்றை தீா்க்கும் வகையிலான திட்டங்களை நான் வைத்துள்ளேன். அதேநேரத்தில் தென் தொகுதி பிரச்னைகளைத் தீா்க்க தமிழச்சி தங்கபாண்டியன் கவனம் செலுத்தவில்லை.

திமுகவினா் தங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க முடியாததால், பிரதமா் மோடி குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனா்.

சென்னையில் நடைபெற்ற பிரதமரின் வாகனப் பேரணிக்கு வரக்கூடாது என மக்களைத் தடுக்க திமுகவினா் திட்டம் தீட்டினா். ஆனால் அதையும் மீறி பொதுமக்கள் பிரதமரின் பேரணியில் பங்கேற்றனா். அவரது வாகனப் பேரணி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால் ஏன் திமுகவும் அதிமுகவும் அதை பற்றி பேசுகின்றன.

திமுக தொகுதியாக இருக்கும் தென் சென்னை விரைவில் பாஜக தொகுதியாக மாறும். சென்னை திமுகவின் கோட்டை என்ற கனவு தகா்க்கப்படும் என்றாா் அவா்.