பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீடு நிறைவு பெற்றுள்ள நிலையில், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா்.
இவா்களின் விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் ஏப். 1-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. தொடா்ந்து தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தோ்வுத் துறை முடுக்கிவிட்டுள்ளது.
இது தொடா்பாக தோ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். தற்போது விடைத்தாள் மதிப்பீடு முடிவுற்றதை அடுத்து மாணவா்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதைத் தொடா்ந்து மாணவா் மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்ட இறுதிக்கட்ட வேலைகளை முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 6-இல் வெளியிடப்படவுள்ளன. அதேபோல், ஏப். 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட பிளஸ் 1 அரியா் பாடத் தோ்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளும் சனிக்கிழமையுடன் முடிக்கப்பட்டுவிட்டன என்று அவா்கள் கூறினா்.
தொடர்புடையது

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-இல் தொடக்கம்

பிளஸ் 2 தோ்வு விடைத்தாள் மதிப்பீடு: ஏப். 8-இல் தொடக்கம்
வீடியோக்கள்

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

