பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வளர்ச்சிக்கான வாக்குறுதிகள் உள்ளடக்கியுள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இன்றைய தினம், பிரதமர் மோடி, ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேர்தல் வாக்குறுதிகளை, உறுதிப் பத்திரம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
நமது பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில், தமிழகத்தின் பெருமையாம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரால், உலகம் முழுவதும் கலாச்சார மையங்கள் அமைப்போம் என்றும், உலகின் மிகத் தொன்மையான மொழியான நமது தமிழ் மொழியின் பெருமையை, உலக அரங்கில் மேலும் அதிகரிக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தனிச் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ் மொழியை மேலும் பலமடங்கு பெருமைப்படுத்தும் விதமாக வாக்குறுதிகளை வழங்கியுள்ள, நமது பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு பாஜக சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தேர்தல் நெருங்கும்போது ஒரு ஃபைனல் டிவிஸ்ட் இருக்கும்! - அண்ணாமலை

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழ்நாடு; பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்களின் நிலை?: கனிமொழி கேள்வி

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26
வீடியோக்கள்

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

