அடுத்த 5 நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 5 நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 5 நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி-40டிகிரி செல்சியஸ், வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி-36 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19-29 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு மற்றும் சேலத்தில் 39.0டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 36.5 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

நாமக்கல்லில் குறைந்தபட்ச வெப்பம் 20.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த 5 தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com