சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ரூ. 4 கோடி விவகாரம்.. நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!

நெல்லை விரைவு ரயிலில் ஆவணங்களின்றி வைத்திருந்த பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2024, 1:22 pm

சென்னை - நெல்லை விரைவு ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நெல்லை விரைவு ரயிலில் ஆவணங்களின்றி வைத்திருந்த பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித் துறையினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த வாரம் 6ம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், பயணித்த மூவர், 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது.

விசாரணையில் பிடிபட்டவர்கள், புரசைவாக்கம் தனியார் விடுதியில் பணியாற்றும் பா.ஜ.க உறுப்பினர் சதீஷ், சகோதரர் நவீன், ஓட்டுநர் பெருமாள் என்பது தெரியவந்தது. இதில் சதீஷ் அளித்த தகவலின்படி நயினார் நாகேந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.