300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை: ராகுல் காந்தி

News image

கோப்புப் படம்.

Updated On :15 ஏப்ரல் 2024, 10:46 am IST

பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை இன்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நீலகிரி தொகுதிக்குட்பட்ட கூடலூரில் தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டுக்கு வருவது தமிழக மக்களை சந்திப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை.

ஜனநாயகத்தை காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். ஒரே நாடு, ஒரு தலைவர் என தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் பிரதமர் மோடி. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை. இந்தியாவில் பல மொழிகள் உள்ளன.

இந்தியாவின் இயல்பை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை. பன்முகத்தன்மை, சமூகநீதியை அழித்து, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை புகுத்த நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். வயநாடு செல்லும் வழியில் நீலகிரியில் கல்லூரி மாணவர்களையும் தொழிலாளர்களையும் அவர் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தாளூரில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.