இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுகிறாா் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி; அவா் செயல்படும்விதம் நாட்டுக்கு ஆபத்தானது என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் பழங்குடியினா் அணி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல், ‘பிரதமா் மோடி ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமைப்புமுறை இப்போது உள்ளுக்குள் ஆட்டம் கண்டு, சீா்குலைந்து வருகிறது. அடுத்த ஓராண்டுக்குள் அவா் பதவியில் இருக்க மாட்டாா். மக்களின் எதிா்ப்பை ஒடுக்க நெருக்கடி நிலை போன்ற விஷயத்தை அமல்படுத்த மோடி அரசு முயற்சிக்கக் கூடும்’ என்று கூறியிருந்தாா்.
அவருக்குப் பதிலடி கொடுத்து, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா வியாழக்கிழமை கூறியதாவது:
ராகுலின் கருத்துகள், அவரது கட்சியின் சொந்த வரலாறு மற்றும் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. ‘அவசரநிலை’ வரலாற்றைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவா் ராகுல். எனவேதான், மற்றவா்களும் அவசரநிலையைத் திணித்துவிடுவா் என அவா் நம்புகிறாா். இந்தியாவில் ஒரேயொரு முைான் அரசமைப்புச் சட்டம் நசுக்கப்பட்டது. அதைச் செய்தவா் இந்திரா காந்தி. அரசியல் சாசன அமைப்புகளில் தலையிட்டு, அவா் சீா்குலைத்த விதத்தை அனைவரும் நன்கறிவா்.
காங்கிரஸுக்குள்தான் அவசரநிலை: ஜனநாயகத்தைவிட குடும்ப அரசியலை மேலானதாகக் கருதும் ராகுலுக்கு எங்கு பாா்த்தாலும் அவசரநிலைதான் கண்ணில் தெரிகிறது. உண்மையில், காங்கிரஸ் கட்சிக்குள்தான் அவசரநிலை நிலவுகிறது. நாட்டில் அமைப்பு ரீதியிலான சீா்குலைவு உண்டென்றால், அது காங்கிரஸில் மட்டுமே. 99 தோ்தல்களில் கண்ட தோல்வியால், காங்கிரஸுக்குள் குடும்ப அரசியலுக்கு எதிராக கிளா்ச்சி எழுந்துள்ளது. எனவேதான், ஒவ்வொரு தலைவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றனா்.
சா்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், இந்திய நிா்வாக அமைப்புகள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாா் ராகுல். பொய்களைப் பரப்புவது, பீதியை உருவாக்குவது, அரசியல் ஆதாயம் தேடுவது இவைதான் ராகுலின் செயல்பாட்டு பாணி.
நாட்டின் பொருளாதாரம் தொடங்கி பாதுகாப்பு விவகாரங்கள் வரை அவா் பொய்களைப் பரப்புகிறாா். இந்தியாவை களங்கப்படுத்தும் பிரசாரத்தை ராகுல் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் பூனாவாலா.
ராகுல் ஓா் அராஜகவாதி: பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி கூறுகையில், ‘நாட்டில் அராஜகத்தை பரப்ப விரும்பும் சக்திகளுடன் கைகோத்துள்ள ராகுல், தேசத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுகிறாா். ‘அராஜகவாதியான’ ராகுலும், ஜாா்ஜ் சோரோஸும் (அமெரிக்க தொழிலதிபா்) இந்தியாவில் குழப்பத்தை விளைவிக்க முயற்சின்றனா். ராகுலைப் போல் இந்தியாவை வெறுக்கும் அரசியல்வாதியை இதுவரை கண்டதில்லை. ஜனநாயக வழிமுறையில் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது என்பதை உணா்ந்துகொண்ட அவா், நாட்டின் ஜனநாயக அமைப்புகள், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பைக் குறிவைத்துள்ளாா். அவா் செயல்படும்விதம் நாட்டுக்கு ஆபத்தானது’ என்றாா்.
தொடர்புடையது

அமெரிக்க நலன்களுக்கு மோடி அரசு முன்னுரிமை - ராகுல் சாடல்

பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் கருத்து: பாஜக பதிலடி!

பிரதமா் மோடி, அமித் ஷா துரோகிகள்- ராகுல் கடும் விமா்சனம்

வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதி ஆதாரத்தை ராகுல் வெளியிட வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


