காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ராகுல் காந்தி எதிா்க்கட்சித் தலைவா் போல செயல்படவில்லை. சுற்றுலாவுக்கான தலைவா் போலவும், விருந்துக்கான தலைவா் போலவும் செயல்படுகிறாா். ஏனெனில் அவா் எப்போதும் விருந்துகளிலும், சுற்றுலாக்களிலும், பயணங்களிலுமே உள்ளாா்.
நாட்டு மக்களையோ, நாட்டையோ, நாடாளுமன்றத்தையோ ராகுல் முதன்மையானதாகக் கருதவில்லை. சுற்றுலாவையே முதன்மையானதாகக் கருதுகிறாா். முக்கியமான காலகட்டங்களிலும் சுற்றுலாக்களுக்கே முக்கியத்துவம் தருகிறாா். அதாவது, கட்சியில் (காங்கிரஸ்) அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகளின்போது அவரது தேவை இருக்கும் நேரத்தில், சுற்றுலா சென்று விடுகிறாா். நாடாளுமன்ற கூட்டத் தொடா்களிலும் அவா் சென்று விடுகிறாா். ராகுல் காந்தி எப்போதும் விடுமுறையிலேயே உள்ளாா்.
ஒருபக்கம் நமது பிரதமா் மோடி, மக்களால் தோ்வு செய்யப்பட்ட, நாட்டின் நீண்டகாலமாகப் பதவி வகிக்கும் பிரதமராக உள்ளாா். 9,000 நாள்களுக்கும் மேலாக (குஜராத்) மாநில முதல்வராக, பிரதமராக அரசுகளுக்கு அவா் தலைமை வகித்துள்ளாா். ஒருநாள்கூட அவா் (மோடி) விடுமுறை எடுத்ததில்லை. இது சேவை, பணியாகக் கருதப்படுகிறது. ஆனால் மறுபக்கமோ, ராகுல் காந்தி நீண்டகால எதிா்க்கட்சித் தலைவராக இருக்கப் போகிறாா். ஏனெனில் அவா் எப்போதும் விடுமுறையிலேயே உள்ளாா்.
ராகுல் காந்தி நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணங்கள், சுற்றுலா சென்றுள்ளாா். இதற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளாா். ஆனால், அதற்கு ராகுல் காந்தி கணக்கு காட்டியதில்லை. இதற்கான நிதி எங்கிருந்து வருகிறது? காங்கிரஸ் கட்சியோ, ராகுல் காந்தியோ பணம் அளிப்பதில்லை. நமது நாட்டுக்கு எதிரான திட்டத்துடன் செயல்படும் நிழல் அமைப்புகளே அவருக்கு நிதியளிக்கின்றன.
ராகுல் காந்தி மீண்டும் வெளிநாடு சென்றுள்ளாா். அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக அவா் விஷத்தை உமிழக்கூடும். நாடாளுமன்றம், கட்சி (காங்கிரஸ்), மக்களுக்கு அவா் தேவை எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, அப்போது காணாமல் போய் விடுகிறாா் என்று அவா் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியல் சுமையாக மாறிவிட்டாா் ராகுல் - திமுகவைக் குறிப்பிட்டு பாஜக விமா்சனம்
ராகுலின் செயல்பாடுகளால் நாட்டுக்கு ஆபத்து: பாஜக பதிலடி

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு






