தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

தென்மாவட்ட மக்கள் பயன்பெற காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் மீண்டும் துவங்கப்படும்.
தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

விருதுநகர் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஏப். 15) வெளியிட்டார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடும் நிலையில், அவரின் தாயார் பிரேமலதா அறிக்கையை வெளியிட்டார்.

அதில், தென்மாவட்ட மக்கள் பயன்பெற காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் மீண்டும் துவங்கப்படும்.

மதுரை திருமங்கலம் மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவங்க நாடாளுமன்றத்தில் அழுத்தம் தரப்படும்,

ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி விருதுநகர் சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தப்படும்

அருப்புக்கோட்டையில் கைத்தறி குழுமம் அமைக்கப்படும், சாய ஆலைகள் பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் உள்ளிட்ட 46 தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளளுடன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

விருதுநகர் எங்களது பாரம்பரிய பூர்வீக மண். சொந்த மண்ணில் போட்டியுடுவதை மக்கள் வரவேற்கிறார்கள். மேற்கு வங்காலத்தில் மம்தா தனித்து போட்டியிடுகிறார். ஜெயலலிதா இருந்தபோது தனித்து போட்டியிட்டு மோடியா லேடியா என்று சொன்னார்.

உறுதியாக 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். எடப்பாடி பழனிசாமி கை காட்டுபவர்தான் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com