விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 6:36 am

DIN

திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவில் உண்மையை மறைத்து வேட்புமனுவை தாக்கல் செய்ததாக மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.

நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது, இவ்வழக்கு தாமதமாக தொடுக்கப்பட்டுள்ளது, தேர்தல் நிறைவடைந்த பின்னர் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம்" என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.