வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் சென்று வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் நடிகர் சூரி திரும்பினார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலை முதலே ஒருசில இடங்களைத் தவிர ஆர்வமாக வாக்கு செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைப் பிரலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் வாக்குச்சாவடியில் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் சென்று வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் நடிகர் சூரி திரும்பினார். இதுதொடர்பாக விடியோ பதிவை வெளியிட்டுள்ள அவர், என் ஜனநாயக கடமையை ஆற்ற வந்தேன். அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்கு பதிவு செய்துள்ளேன்.

மனைவிக்கு ஓட்டு உள்ளது. எனது பெயர் மட்டும் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது. ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எல்லோரும் வாக்களியுங்கள். அடுத்த தேர்தலில் நிச்சயம் வாக்களிப்பேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com