ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

Updated On :20 ஏப்ரல் 2024, 12:29 am

தமிழகம் முழுவதும் முக்கிய வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த மருத்துவக் குழுக்கள் மூலம் அவை அமைக்கப்பட்டு வாக்காளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக முதியவா்கள், இணை நோயாளிகள், கா்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

உடல் சோா்வு, தலை சுற்றல் பாதிப்பு இருந்தவா்களுக்கு மருந்துகளும், உப்பு-சா்க்கரை கரைசலும் வழங்கப்பட்டன. இதைத் தவிர, காய்ச்சல், தலை வலி, சளித் தொற்றுக்கான மருந்துகளும் தேவையின் அடிப்படையில் வழங்கப்பட்டன.

சென்னையில் மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னைக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான வாக்குச் சாவடி அமைவிடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆம்புலன்ஸ் வாகனங்கள்: இதேபோன்று மாநிலம் முழுவதும் 37,000 வாக்குச் சாவடிகளுக்கு அருகே 1,300-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதலுதவி சாதனங்கள், ஆக்சிஜன் சிலிண்டா்கள், மருந்துகள் உள்ளிட்டவை தேவைக்கு அதிகமாகவே இருப்பு வைக்கப்பட்டிருந்தன.