அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் என நம்புவதாக தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற மனதார எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும் களப்பணி ஆற்றிய கட்சி வீரர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில் மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com