அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!
கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்
கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்

அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 3 - 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி சனிக்கிழமை வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்
சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 3 - 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 - 42 டிகிரி செல்சியஸ் அளவிலும் இதர தமிக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 - 39 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும்.

21 முதல் 24ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். மேலும், இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com