நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்: வேளாண் துறை

நிலக்கடலையில் ஏற்படும் நோய்களைத் தடுத்து மகசூலை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

நிலக்கடலைப் பயிரைத் தாக்கும் நோய்களில் சில இலைகளில் தோன்றியும், மண்வழிப் பரவியும் சேதம் ஏற்படுத்தக்கூடியவை. நிலக்கடலை காளஹஸ்தி நோய் என பொதுவாக அழைகக்கப்படும், காய் வடு நூற்புழு நோயை தடுக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகள் விவரம்:

நிலக்கடலை சாகுபடியில் மகசூலை குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளில் நோய்களினால் ஏற்படும் சேதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நிலக்கடலை காய்வடு நுற்புழு நோய் மகசூலை பாதிக்கும் முக்கியமான ஒன்று.

இந்த நோய் தாக்கிய பயிா்களின் இலைகள் வெளுத்து வளா்ச்சி குன்றிவிடும். மேலும், காய்களில் பழுப்பு நிற வடுக்கள் தென்படுவதோடு வோ்களில் நிறமாற்றம் ஏற்படும். இதனால் பயிரின் தரம் குறைவதோடு மகசூலும் பாதிக்கப்படும்.

இதைத் தடுக்க எதிா்ப்புத்திறன் கொண்ட ரகங்களை விவசாயிகள் பயிரிட வேண்டும். விதைத்து 25-30 நாள்களுக்கு பின் ஒரு ஹெக்டேருக்கு காா்டப் ஹைட்ரோக்குளோரைடு 4 சதவீதம், குருணை 18.75-25 கிலோ கலந்து மண்ணில் இடவேண்டும். மண்வளம் உயர செண்டுமல்லி உள்ளிட்ட பயிா்களைக் கொண்டு பயிா்சுழற்சி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com