ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

விராலிமலை பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பற்றி எரிந்த தீ

News image
Updated On :22 ஏப்ரல் 2024, 3:39 am

DIN

விராலிமலை பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பற்றி எரிந்த தீயால் பரபரப்பு நிலவியது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-திருச்சி சாலை தனியார் கூடு கட்டும் தொழிற்சாலை அருகே பல ஏக்கரில் தனியார் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் அப்பகுதி தொழிற்சாலை கழிவு பொருட்களை டன் கணக்கில் சேமித்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நள்ளிரவு மூன்று மணி அளவில் திடீரென அந்த குடோனில் இருந்து தீப்பிழம்பு கிளம்பி உள்ளது.

இதனையடுத்து தீ மளமளவென பரவி பழைய பொருட்கள் பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தொழிலாளர்கள் அளித்த தகவலை தொடர்ந்து நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனர்.

பழைய பொருட்கள் என்பதாலும் வெயிலில் காய்ந்து கிடப்பதாலும் தீ கட்டுக்கடங்காமல் ஆங்காங்கே தற்போது வரை எரிகிறது. எனவே, தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டாட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.