குகேஷ்-க்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

குகேஷ்-க்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், வியத்தகு சாதனையைப் புரிந்துள்ள குகேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

குகேஷ்-க்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்றார் குகேஷ்

வெறும் 17 வயதில், FIDE Candidates தொடரின் மிக இளவயது 'சேலஞ்சர்'-ஆக வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றி வெறும் முதல் வீரராகச் சாதித்துள்ளார்.

அடுத்து, டிங் லிரன் உடனான உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றிவாகை சூடிட எனது வாழ்த்துகள்.

எடப்பாடி பழனிசாமி: தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் மிக இளம் வயதில் #FIDECandidates சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com