
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இறைபணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குதிரை ராஜா உடல் சுகவீனம் அடைந்து மரணமடைந்தது.
சிதம்பரம் நடராஜர் கோயில் அசுவ பூஜைக்காக சென்னை பக்தர் செல்வராஜு குதிரை ஒன்றை அளித்தார். ராஜா என அழைக்கப்பட்ட அந்த குதிரை கடந்த நான்கு வருடங்களாக தில்லை நடராஜரின் இறைபணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இதனிடையே கடந்த நான்கு நாட்களாக உடல் நலம் குன்றிய குதிரை ராஜாவுக்கு கால்நடை மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த குதிரை சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை எல்லாம் வல்ல தில்லை நடராஜரின் சிவபாதத்தை அடைந்தது.
குதிரை ராஜாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் முறைப்படி மருத்துவ சான்று பெற்று பக்தர்களும் தீக்ஷிதர்களும் மலர் அஞ்சலி மற்றும் மத சடங்குகள் செய்யப்பட்டு அந்த குதிரை ராஜா ருத்ர பூமி என்கின்ற மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என கோயில் பொது தீட்சிதர்களின் செயலர் உ.வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.