பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து வரும் வாகனங்களை போடிமெட்டு சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனையிடும் குரங்கணி போலீஸாா்.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து வரும் வாகனங்களை போடிமெட்டு சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனையிடும் குரங்கணி போலீஸாா்.

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

கேரள - தமிழக எல்லைப் பகுதிகள் தமிழகத்தில் முக்கியமான 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 12சோதனைச் சாவடிகளில் கேரளத்தில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்படுகிறது.

கேரளத்தில் இருந்து வாத்து, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கான தீவனங்களைக் கொணடு வரும் வாகனங்களில் தீவிரசோதனை நடத்துமாறு கால்நடைத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

கேரளத்திலிருந்து வரும் வாகனங்களின் டயர்கள் உள்ளிட்டவற்றுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படு, அவை தமிழக எல்லைக்குள் எந்த அபாய கிருமிகளையும் கொண்டு வராத வகையில் தடுக்கப்படுகிறது.

மேலும், வாகனங்களில் கோழி மற்றும் கால்நடைகள் தொடர்பான பொருள்கள் இருக்கிறதா என்றும், பயணிகளின் உடைமைகளில் முட்டை, கோழிக்கறி உள்ளிட்டவை இருக்கிறதா என்றும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com