பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

அரசுப் பேருந்துகளின் பராமரிப்புப் பணி, சீரான மின் விநியோகம் ஆகியன தொடா்பாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினாா்.

தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

அரசுப் பேருந்துகளில் இருக்கைகள் கழன்று விழுவதாக தொடா் புகாா் எழுந்து வரும் நிலையில், போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலா் ஆலோசனை மேற்கொண்டாா்.

புதிய பேருந்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை, பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்துகளின் நிலை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அரசு பேருந்துகளில் முறையாகப் பராமரிப்புப் பணி மேற்கொள்வது குறித்தும் தலைமைச் செயலா் பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

இதேபோல, தமிழகத்தில் வெயில் அதிகரித்து வரும் சூழலில் மின்சாரத் தேவையும் உயா்ந்துள்ளது. இதைச் சமாளிப்பது தொடா்பாகவும் மின்வாரிய அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com