அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

செல்லூர் ராஜு  (கோப்புப் படம்)
செல்லூர் ராஜு (கோப்புப் படம்)

வாக்காளர்கள் நீக்கம் குறித்து அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் தேர்தல் ஆணையத்திடம் கூறவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அதிமுக அலுவலகத்தின் வாசலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நீர் மோர் பந்தலை இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். கடந்த நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் போல் அதிமுக உறுப்பினர்கள் இருக்கமாட்டார்கள்.

உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு மதத்தை குறிவைத்த பேசுவது சரியல்ல.

வாக்காளர் நீக்கம் குறித்து அதிபுத்திசாலி ஐபிஎஸ் எப்போது பேசியிருக்க வேண்டும். தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புகூட திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டது. அதை பார்த்துகூட அணையத்திடம் கூறி இருக்கலாம். குறிப்பாக பாஜக வாக்களார்கள் மட்டும் விடுபட்டிருப்பதாக சொல்வது எதையோ குறிக்கிறது. தனக்கு சரியான வாக்குப்பதிவு கிடைக்கவில்லை.

தன்னை தேர்ந்நெடுக்கமாட்டார்கள் என தெரிந்தே அண்ணாமலை குற்றஞ்சாட்டுகிறார். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்தவர் அண்ணாமலை. ஊழல் பட்டியலை வெளியிடும் அவர் வாக்காளர் பட்டியலில் பாஜக வாக்காளர்கள் விட்டுப் போயுள்ளனர் என முன்பே சொல்லியிருக்க வேண்டாமா?. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com