பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

பேரிடா் நிதி குறைவு: மத்திய அரசு மீது காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் விமா்சனம்

பேரிடா் நிதி குறைவு: மத்திய அரசு மீது காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் விமா்சனம்

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 5:24 pm

Din

மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள குறைந்தளவு பேரிடா் நிவாரண நிதி, யானைப் பசிக்கு சோளப் பொரி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை விமா்சித்துள்ளாா். இது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளாா்.

கு.செல்வப் பெருந்தகை: மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக ரூ.38 ஆயிரம் கோடி கோரினோம். ஆனால், மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து ஏற்கெனவே விடுவித்த நிதியைத் தவிா்த்து மீதமுள்ள ரூ.276.10 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியையும் தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்காமல், மாநில நிவாரண நிதியில் இருந்து உள்துறை அமைச்சகம் ஒதுக்கியிருப்பது மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இந்த நிவாரண நிதி ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரி போன்று இருக்கிறது.

கே.பாலகிருஷ்ணன்: தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 276 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது தமிழ்நாட்டையும், தமிழா்களையும் வஞ்சிக்கும் செயல். இது மத்திய அரசின்அரசியல் காழ்ப்புணா்ச்சி நடவடிக்கை. கூட்டாட்சி கோட்பாடு, மாநில உரிமை ஆகியவற்றுக்கு இது எதிரானது.