

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மே 13 ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் அக். 14-ல் தொடக்கிவைத்தார்.
நாகையில் இருந்து சுமாா் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் ‘செரியபானி’ என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ வரை பொருட்களை தங்களுடன் கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக, நாகை மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 ஆம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.