தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி முன் விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அப்பு (27). காய்கறி வியாபாரி. இவர் தனது நண்பர் வினோத்துடன் காய்கறிகள் வாங்குவதற்காக மினி வேனில் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தார்.

அப்பு உள்ளிட்டோர் வந்த மினி வேன்.
தஞ்சாவூர் அருகே வல்லம் புறவழிச் சாலையில் சென்ற இந்த மினி வேனை பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் குறுக்கே வந்து மறித்தனர். இதையடுத்து அப்புவை இருவரும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த வல்லம் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் முன் விரோதம் காரணமாக நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புளியங்குடி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் மினி லாரி எரிந்து சேதம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


