செப். 1 முதல் புதிய விலையில் 
நெல்கொள்முதல்: அமைச்சா் தகவல்
dot com

செப். 1 முதல் புதிய விலையில் நெல்கொள்முதல்: அமைச்சா் தகவல்

அறிவிக்கப்பட்ட புதிய விலையில் செப். 1 முதல் நெல்கொள்முதல் செய்யப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
Published on

சென்னை, ஆக. 2: அறிவிக்கப்பட்ட புதிய விலையில் செப். 1 முதல் நெல்கொள்முதல் செய்யப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

2023-24-ஆம் ஆண்டு காரிஃப் பருவத்தில், ஜூலை 31 வரை 3,200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3.85 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றனா். அவா்களிடமிருந்து 33.22 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.7,277 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2024-25-ஆம் ஆண்டு காரிஃப் பருவத்துக்கு சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.2,450-ம், பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,405 என்ற விலையும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். எனவே, விவசாயிகள் செப். 1 முதல் புதிய விலையில் கொள்முதல் செய்ய நெல் அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com