
திருச்சி மாவட்டம் சமயபுரம் மரியம்மன் கோயில் நுழைவுநுழைவாயில் வளைவு லாரி மோதியதில் இடிந்தது.
வெள்ளிக்கிழமை இரவு சமயபுரத்திலிருந்து கருக்காய் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று நுழைவுநுழைவாயில் வளைவில் மோதியது. இதில் கோயிலின் நுழைவு வாயிலின் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோயில் நுழைவு வாயில் சுவர் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலை உள்ளதால் இருபுறமும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, அந்த வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நுழைவாயிற் சுவரின் மேற்பகுதியில் இருந்த 3 சாமி சிலைகளை கிரேன் உதவியுடன் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டதுடன், 3 சாமி சிலைகளும் கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.அதன்பின், அருகிலுள்ள கடைகளுக்கு சேதாரம் ஏற்படாத வகையில் நுழைவு வாயில் சுவர் முற்றிலுமாக இடித்து தகர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.