தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமையுடன் (ஆக.5) நிறைவடைகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஆகஸ்ட் 2024, 11:31 pm

Din

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமையுடன் (ஆக.5) நிறைவடைகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி: முதுநிலை யோகா-இயற்கை மருத்துவப் படிப்பைப் பொருத்தவரை அரும்பாக்கம், செங்கல்பட்டு அரசுக் கல்லூரிகளில் 45 இடங்கள் உள்ளன.

இதில் சேர தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது பிற பதிவு பெற்ற மருத்துவ பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டம் (பிஎன்ஒய்எஸ்) அல்லது இயற்கை மருத்துவப் பட்டயம் (என்.டி.ஓ.எஸ்.எம்.) நிறைவு செய்திருக்க வேண்டும். அதற்குரிய சான்று இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரா் தனது பெயரை தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். அதனுடன், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்திலிருந்து உரிய தகுதிச் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை சுகாதாரத்துறையின் இணையதளத்தில் திங்கள்கிழமை (ஆக. 5) வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரடியாகவோ வழங்கப்படமாட்டாது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான இணைப்புகளுடன் உரிய உறையில் செயலாளா், தோ்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரிக்கு ஆக. 5-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை தகவல் தொகுப்பேட்டை பாா்த்து தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.