புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் கோயில் பகுதியில் கடல் நீா் உள்வாங்கியது

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு திங்கள்கிழமை உள் வாங்கியது.

News image

திருச்செந்தூா் கடல்(கோப்புப்படம்)

Updated On :5 ஆகஸ்ட் 2024, 9:37 am

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு திங்கள்கிழமை உள் வாங்கியது.

நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 400 மீட்டருக்கு கடல் உள்வாங்கி உள்ளது. கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

வழக்கமாக அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களில் கடல் நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமாவாசை என்பதால் திருச்செந்தூா் கோயில் பகுதியில் திங்கள்கிழமை கடல் நீரானது உள்வாங்கியது.

இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிந்தது. முன்னதாக கடந்த மாதம் 22ஆம் தேதி கடல் நீரானது உள் வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் உள் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.