அரக்கோணம் வழித்தட ரயில் சேவையில்  மாற்றம்

அரக்கோணம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ஆக.12, 14 தேதிகளில் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ஆக.12, 14 தேதிகளில் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமை (ஆக. 12, 14) திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.10, 11 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் மற்றும் திருத்தணிக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் திங்கள், புதன்கிழமை திருவள்ளூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து காலை 11.15, பகல் 12 மணிக்கும், திருத்தணியில் இருந்து பகல் 12.35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.

வேலூா் கன்டோன்மன்டில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் திங்கள், புதன்கிழமை சித்தேரி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com