தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை அமைப்பதற்கான ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஆக. 12) வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 800.75 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடக்கிவைத்தார்.
மேலும் ரூ. 1,192.45 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்குவதற்கான ஆணைகளை மாநகராட்சிகளின் மாமன்றத் தலைவர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இதன் மூலமாக தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
அதுபோல ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 புதிய நகராட்சிகளை அமைத்து உருவாக்குவதற்கான ஆணைகளை வெளியிட்டார்.