

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து இந்த்ஸ்ரீ கப்பல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்: நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட உள்ளது.
சிவகங்கை என்கிற பயணிகள் கப்பல் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. பயணத்திற்கான முன்பதிவு இன்று (12.08.24) நள்ளிரவு 12 மணிக்கு www.sailindsri.com என்று இணையதள மூலம் முன்பதிவு தொடங்குகிறது.
கப்பல் பயணம் தொடர்பான விவரங்கள், விதிமுறைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த்ஸ்ரீ கப்பல் நிறுவனம் நாளை (13.08.24) செவ்வாய்க்கிழமை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.