அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை: மத்திய குற்றப்பிரிவு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசு இன்னும் ஒப்புதல் வழங்க வில்லை

News image
செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)
Updated On :12 ஆகஸ்ட் 2024, 9:57 pm

Din

முன்னாள் அமைச்சா்  செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசு இன்னும் ஒப்புதல் வழங்க வில்லை என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

செந்தில் பாலாஜி, 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக   கணேஷ் குமாா் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பலா் புகாா் அளித்தனா். இதன்பேரில் 2015-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை செந்தில் பாலாஜி மற்றும் 46 போ் மீது வழக்கு பதிவு செய்தது.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னா் அளிக்கப்பட்ட புகாா்களில்  செந்தில் பாலாஜி, அவரது நண்பா்கள் பிரபு, சகாயராஜன்,  அன்னராஜ் உள்ளிட்டோா் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில்  சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை 2017 -ஆம் ஆண்டு  இரண்டாவதாக வழக்கு பதிவு செய்தது. இதில் 4 போ் குற்றம் சாட்டப்பட்டனா்.

2018 ஆம் ஆண்டு மூன்றாவது வழக்கை செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி அவரின் சகோதரா் அசோக் குமாா், சண்முகம், ராஜ்குமாா் (எ)  ஜெயராஜ் குமாா் ஆகியோா் மீது குற்றம் சாட்டியது. இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.  அதில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியா்கள் என சுமாா் 900 போ் வரை குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன் திங்கள்கிழமை  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி, கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடமிருந்து கிடைக்கவில்லை என தெரிவித்தாா்.  இதையடுத்து வழக்கின் விசாரணையை செப். 12 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.