ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நெல்லை-தூத்துக்குடி பயணிகள் ரயில் இனி இயங்காது!

மிகக் குறைந்த அளவே பயணிகள் பயணிப்பதால் ரயில் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:46 pm

Din

திருநெல்வேலி-தூத்துக்குடி இடையேயான பயணிகள் ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலியிலிருந்து கங்கைகொண்டான், வாஞ்சிமணியாச்சி, தட்டாப்பாரை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் காலை 7.35 மணிக்கும், மறுமாா்க்கமாக மாலை 6.25 மணிக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

பாலக்காடு-திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி-திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படாது என ரயில்வே நிா்வாகம் முதலில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் மிகக் குறைந்த அளவே பயணிகள் பயணிப்பதால் ரயில் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.