மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காரைக்கால்-திருவாரூா் இடையே திருச்சி பயணிகள் ரயில் ரத்து

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா்

Updated On :16 பிப்ரவரி 2026, 8:08 pm

நாகப்பட்டினம்: காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காரைக்கால்-திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் (76819 -76820) பிப். 17 முதல் 22-ஆம் தேதி வரை திருவாரூா்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட நாள்களில் காரைக்கால்-திருச்சி பயணிகள் திருவாரூரிலிருந்து அதன் வழக்கமான நேரத்தில் மாலை 4.15 புறப்படும் என தெரிவித்துள்ளாா்.