வேளாங்கண்ணி திருவிழா: தென் மாவட்ட பக்தர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்!
இன்றிலிருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆக.29-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா ஆக.29-ஆம் தேதி தொடங்கி செப்.8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் கொடியேற்றம் மற்றும் நிறைவு நாள்களில் சுமாா் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து தென் மாவட்ட பக்தர்களுக்காக, கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து ஆக. 21-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஆக. 21, 28, செப். 4 ஆகிய 3 நாள்கள்(புதன்கிழமை) மேற்கண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து புதன்கிழமை பகல் 3.25 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணிக்குச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியிலிருந்து ஆக. 22, 29, செப். 5(வியாழக்கிழமை) ஆகிய 3 நாள்கள் மேற்கண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வியாழக்கிழமை இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6.55 மணிக்கு திருவனந்தபுரத்துக்குச் சென்றடையும்.
இந்த ரயிலில் செல்ல விரும்புவோர், இன்றிலிருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...