தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

News image
செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)
Updated On :20 ஆகஸ்ட் 2024, 9:13 am

DIN

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று(ஆக. 20) விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இவ்வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் செந்தில் பாலாஜி தாக்கல் மனுவின் விசாரணையை முடித்திருந்த உச்சநீதிமன்றம், தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தீா்ப்பு எப்போது வரும் என எதிா்பாா்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையில், செந்தில் பாலாஜி மீது நிலுவையிலுள்ள 3 வழக்குகள் மீதும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ளுமா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதனிடையே, போக்குவரத்துத் துறையில் 2,175 இடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அடங்கிய குறிப்பு நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.