தமிழக காவல் துறையில் 5 காவல் துணை கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதற்கான உத்தரவை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.
இதில் முக்கியமாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முத்துராஜா, சென்னை மடிப்பாக்கத்துக்கும்,விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் டிஎஸ்பி சி.முகேஷ் ஜெயக்குமாா், சென்னை செம்பியத்துக்கும்,காத்திருப்போா் பட்டியலிலிருந்த டிஎஸ்பி கே.ஜெகதீசன் எழும்பூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 5 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










