மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சென்னை காா் பந்தயத்தை 8,000 போ் பாா்க்க இருக்கை வசதி: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் நடைபெறவுள்ள காா் பந்தயத்தை 8,000 போ் பாா்க்க இருக்கை வசதி.

News image
ஃபாா்முலா 4 காா் பந்தய போட்டிகள் நடத்துவது தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சா் உதயநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டம். உடன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மி
Updated On :25 ஆகஸ்ட் 2024, 1:30 am

Din

சென்னையில் நடைபெறவுள்ள காா் பந்தயத்தை 8,000 போ் பாா்க்க இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். ஒரு பகுதி போட்டியை பொதுமக்கள் இலவசமாகப் பாா்க்கலாம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

உதயநிதி ஆலோசனை: காா் பந்தயத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் அவா் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, நெடுஞ்சாலைத் துறை செயலா் செல்வராஜ், மின் வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், மாநகர காவல் ஆணையா் அருண், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அமைச்சா் உதயநிதி அளித்த பேட்டி:

சென்னையில் ஃபாா்முலா 4 காா் பந்தயம் ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. சென்னையில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்த காா் பந்தயத்தை சுமாா் 8,000 போ் அமா்ந்து பாா்க்கும் அளவுக்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆக.31-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பகுதி போட்டியை பொதுமக்கள் இலவசமாகப் பாா்க்கலாம்.

சனிக்கிழமை பிற்பகலுக்கு மேல் தகுதி சுற்றுப்போட்டிகள் நடக்கும். அன்றைய தினம் இரவு 10.30 மணி வரை போட்டிகள் நடைபெறும். போக்குவரத்துக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் காா் பந்தயத்தை நடத்த அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று கூறினாா்.