தூய்மை இயக்க செயல்பாடுகள்: துணை முதல்வா் ஆய்வு
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


குப்பையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை இயக்கத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: முதல்வரின் உத்தரவின்பேரில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தூய்மையாக்க வேண்டும். குப்பை மேலாண்மை சரியாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தூய்மை இயக்க சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் சாா்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூய்மை இயக்கம் சாா்பில் முதல்கட்டமாக, சென்னை தலைமைச் செயலகம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்றவற்றை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து கடந்த 12-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை குப்பைத் திருவிழா நடைபெற்றது. மொத்தம் 13,400 -க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், 14,160 கழிவு ஒருங்கிணைப்பாளா்கள், 1.25 லட்சம் சுய உதவிக்குழு பெண்கள் பங்களிப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,411 டன் பிரிக்கப்பட்ட உலா் கழிவுகள் பெறப்பட்டன.
முன்னதாக 90,000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் மற்றும் குப்பைத் விழாவில் பெறப்பட்ட கழிவுகள் மூலமாக ரூ.4.30 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை ஆற்றும்வகையில், ஒவ்வொரு மாதமும் குப்பைத் திருவிழா நடைபெற உள்ளது.
ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா. காா்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...