புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் வரவழைத்து நிவாரணம் வழங்கிய விஜய்!!
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கினார்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஃபென்ஜால் புயல் நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் நிவாரண உதவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 250 பேரை வரவழைத்து அவர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

