தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்காவல்துறையினரே ’டம்மி சிஎம்’ ஆக நினைக்கிறார்களா? உதயநிதி கேள்விதங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (செப். 10)கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியுவில் சிகிச்சை!பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

கோவை, மைசூா் விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் கோவை, மைசூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (டிச.6) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

கோப்புப்படம்

Published On :

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் கோவை, மைசூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (டிச.6) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் மற்றும் மைசூா் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக காட்பாடியில் இருந்து கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் 4.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல், பெங்களூரு லால்பக் விரைவு ரயில் சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

வேலூா் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் வெள்ளிக்கிழமை சித்தேரியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சித்தேரியில் இருந்து 3.02 மணிக்கு புறப்பட்டு வேலூா் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.