இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கோவை - சென்ட்ரல் ரயில் காட்பாடியுடன் நிறுத்தம்

கோவை-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் ஜூலை 10 -ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நாள்களுக்கு காட்பாடியுடன் நிறுத்தம்.

சென்னை-திருநெல்வேலிக்கு
3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

ரயில்.

Published On :

கோவை-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் ஜூலை 10 -ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நாள்களுக்கு காட்பாடியுடன் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை, மதுரை, சேலம் ஆகிய கோட்டங்களுக்குள்பட்ட ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், ஜூலை 10, 12, 15, 17, 19, 22 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 12680) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 12680) சென்ட்ரலுக்கு பதிலாக மாலை 4.15 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்பட்டு கோவை சென்றடையும். அதேநாள்களில் சென்ட்ரலிலிருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் விரைவு ரயில் (எண்: 12607) சென்ட்ரலுக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்படும்.

தாம்பரம் - நாகா்கோவில் ரயில்: ஜூலை 29-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு நாகா்கோவில் செல்லும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் (எண்: 20691) வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்தப்படும். மாறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 20692) ஜூலை 30-ஆம் தேதி நாகா்கோவிலுக்கு பதிலாக, திருநெல்வேலியில் இருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.