
அம்பேத்கர் நினைவு நாளான இன்று(டிச.6) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகத்தை வழங்கினார்.
இந்த விழாவில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, நீதிபதி சந்துரு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அம்பேத்கருடன் கைகளைப் பற்றியபடி விஜய் இருக்கும் ஓவியம், அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
இதையும் படிக்க..:விண்ணை முட்டும் புஷ்பா-2 முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா..?
விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நூலை வெளியிட நீதிபதி சந்துரு, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் அந்த நூலை பெற்றுக்கொண்டனர்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் விஜய் பேசியதாவது:
அம்பேத்கரின் விழாவில் பங்கேற்பது வரம். அம்பேத்கரின் வைராக்கியம் பிரம்மிக்கத்தக்கது. அரசமைப்பை வகுத்து அம்பேத்கர் இன்று இருந்தால் இந்தியாவில் நிலையை பார்த்து என்ன நினைப்பார். அம்பேத்கர் சட்ட அரசியலமைப்பை வகுத்த பிறகும் சாதிய கொடுமைகள் இருக்கத்தான் செய்தது.
இதையும் படிக்க..:ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளும் அழுத்தத்தில் இருக்கிறேனா? டிராவிஸ் ஹெட் பதில்!
மணிப்பூரின் அரசை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஜனநாயகத்தின் ஆணி வேர் நியாயமான தேர்தல்தான். சுதந்திரமாக, நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதாக மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். மக்களை நேசிக்கும் அரசு அமைய வேண்டும். அம்பேத்கர் பிறந்தநாளை ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகளால் அவருக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க நம்முடன்தான் இருக்கும்.
கூட்டணிக் கட்சி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.
இதையும் படிக்க..: ஒடிசாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்காக காத்திருப்பு!
நீங்கள் உங்களோட சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணிக் கட்சி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.
சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதாக மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று போட்டோ எடுக்க முடியாது.. சம்பிரதாயதிற்காக டுவிட், சம்பிரதாயதிற்காக அறிக்கை, சம்பிரதாயத்திற்காக எடுக்கும் புகைப்படங்களில் எனக்கு உடன்பாடில்லை” என்றார் விஜய்.
இதையும் படிக்க..: கொடி நாளில் பெருமளவு நிதி வழங்குங்கள்- முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.