சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 16% அதிகம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிகழாண்டில் இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 டிசம்பர் 2024, 7:22 pm

Din

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிகழாண்டில் இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகையில் 913 மி.மீ., சென்னையில் 845 மி.மீ. மழை பெய்துள்ளது.

நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்.15-இல் தொடங்கி, தற்போது வரை தமிழகத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. மேலும், ஃபென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம், கடலூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீா்த்தது.

அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஆகிய பகுதிகளில் 500 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது.

16 சதவீதம் அதிகம்: இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.1 முதல் டிச.8-ஆம் தேதி வரை இயல்பாக 387.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், தற்போது 448.6 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது, இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. அதே நேரத்தில், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவே மழை பெய்துள்ளது.

சென்னையில் இயல்பாக 718 மி.மீ. மழை பெய்ய வேண்டிய சூழலில், நிகழாண்டில் இயல்பை விட 845 மி.மீ. அதாவது 18 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. புயலுக்கு முன்பு வரை சென்னையில், இயல்பை விட 3 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.