கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் குளிரின் தீவிரம் குறைந்தது! குறைந்தபட்ச வெப்பநிலை சற்று உயா்வு

ஐந்து நாள் குளிா் அலைக்குப் பிறகு தில்லி மக்கள் எலும்பை உறைய வைக்கும் வெப்பநிலையிலிருந்து சிறிது நிம்மதி அடைந்தனா்.
Published on

ஐந்து நாள் குளிா் அலைக்குப் பிறகு தில்லி மக்கள் எலும்பை உறைய வைக்கும் வெப்பநிலையிலிருந்து சிறிது நிம்மதி அடைந்தனா். வெள்ளிக்கிழமை நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியஸாக பதிவாகிகியுள்ளது. இது ஒரு நாள் முந்தையதை விட இரண்டு டிகிரி அதிகமாகும். இருப்பினும், வெப்பநிலை இயல்பை விட மிகவும் குறைவாகவே இருந்தது.

தில்லியின் முதல்மை வானிலை கண்காணிப்பு நிலையமைான சஃப்தா்ஜங் நிலையத்தில் பதிவான 4.3 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைவாகும். மேலும், பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட ௌ3 டிகிரி குறைவாக 4.7 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் இயல்பை விட 1 டிகிரி குறைவாக 4.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. ரிட்ஜ் நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைவாக 6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

வியாழக்கிழமை சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இது 2023 ஜனவரி மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த குறைந்தபட்ச வெப்பநிலையாகும். பாலம் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 2.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இது 2010-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும்

காற்றின் தரம்: இதற்கிடையில், தேசியத் தலைநகரில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 348 புள்ளிகளாக இருந்தது. 33 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், நான்கு நிலையங்களில் ‘மோசம்’ பிரிவிலும் மற்றும் ஒரு நிலையத்தில் ‘கடுமை’ பிரிவிலும் பதிவாகின. பூசாவில் காற்றுத் தரக் குறியீடு அதிக அளவாக 403 புள்ளிகளாக பதிவாகி ‘மோசம்’ பிரிவில் பதிவானது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (ஜனவரி 17) அன்று காலை வேளையில் கடும் பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com