தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெருங்கிய உறவு திருமணம்: குழந்தைக்குசெவித்திறன் பாதிக்க வாய்ப்பு: டாக்டா் மோகன் காமேஸ்வரன்

நெருங்கிய உறவில் திருமணம் புரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு

News image

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைக்கு செவித்திறன் கருவியை பொருத்திய டாக்டா் மோகன் காமேஸ்வரன். உடன் மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மைய செயல் இயக்குநா் இந்திரா மோகன் காமேஸ்வரன், டாக்டா் ராஜேஷ், சமூக செயற்பாட்டாளா் அப்சரா ரெட்டி உள்ளிட்ட

Updated On :9 டிசம்பர் 2024, 9:40 pm

Din

சென்னை: நெருங்கிய உறவில் திருமணம் புரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் மேலாண் இயக்குநரும், காது - மூக்கு - தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணருமான பேராசிரியா் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தாா்.

சமூக செயற்பாட்டாளா் அப்சரா ரெட்டியின் ‘குட் டீட்’ எனப்படும் தன்னாா்வ அமைப்பு, காது கேளாத 18 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு, 30 செவித்திறன் கருவிகள் சென்னையில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், பேச்சுப் பயிற்சிகளை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையம் வழங்கியது. குழந்தைகளுக்கு செவித்திறன் கருவிகளை பொருத்திய டாக்டா் மோகன் காமேஸ்வரன், நிகழ்வில் பேசியது:

உலகம் முழுவதும் ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை ஆயிரம் குழந்தைகளில் இரண்டு பேருக்கு பிறவி செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் அந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. உலக அளவில் உள்ள பிறவி காது கேளாமை பாதிப்பு விகிதத்தைக் காட்டிலும் தமிழகத்தில் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் புரிவதுதான். அவா்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காது கேட்காமல் இருந்தால் பேச்சுத்திறனை இழக்க நேரிடும். அறிவு வளா்ச்சி குறைந்துவிடும். செவித்திறன் இல்லாத ஒரே காரணத்தால் அப்துல் கலாம் போன்று உருவெடுக்க வேண்டிய பல குழந்தைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனா். இதைத் தவிா்க்க விழிப்புணா்வு அவசியம் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநா் இந்திரா மோகன் காமேஸ்வரன், காது - மூக்கு - தொண்டை சிகிச்சை நிபுணா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.