விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜாமீன் வழங்கிய 7 நாள்களுக்குள் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்

ஜாமீன் வழங்கிய 7 நாள்களில், சிறைகளிலிருந்து கைதிகள் விடுதலையாவதை உறுதிசெய்ய வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :9 டிசம்பர் 2024, 10:09 pm

Din

சென்னை: ஜாமீன் வழங்கிய 7 நாள்களில், சிறைகளிலிருந்து கைதிகள் விடுதலையாவதை உறுதிசெய்ய வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த வழியின்றி சிறைகளில் இருக்கும் கைதிகளை வெளியே கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் கிடைத்தும் சிறைகளில் இருந்து வெளியே வர முடியாமல் இருப்பதாக செய்தி வெளியான நிலையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது.

ஜாமீன் கிடைத்தும் வெளியே வர முடியாமல் தவிக்கும் கைதிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமா்வு ஏற்கெனவே உத்தரவிட்டிரிந்தது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசுத்தரப்பு வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஜாமீன் கிடைத்தும் பிணைத் தொகையை செலுத்த முடியாமல் 22 தண்டனைக் கைதிகளும், 153 விசாரணைக் கைதிகளும் வெளியே வர முடியாமல் சிறைக்குள்ளேயே இருக்கின்றனா். மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் உத்தரவுகள் சிறைகளுக்கு தாமதமாக அனுப்பப்படுவதும் ஒரு காரணம். மத்திய அரசின் திட்டத்தை பின்பற்றி ஏழை, எளிய கைதிகளுக்கு நிதியுதவி செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்றாா்.

நீதிபதிகள் உத்தரவு:

இதையடுத்து நீதிபதிகள், ஜாமீன் கிடைத்த 7 நாள்களில் கைதிகள் விடுதலையாவதை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்”என அறிவுறுத்தினா். மேலும், “மாநிலம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கைதிகள், ஜாமீன் கிடைத்தும் சிறைகளிலிருந்து வெளியே வர முடியாமல் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், கைதிகளின் எண்ணிக்கை, அவா்களின் பின்னணி குறித்த விவரங்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக சேகரித்து, அவா்களை ஜாமீனில் விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலருக்கு உத்தரவிட்டுள்ளனா். அத்துடன், அரசின் உதவித் திட்டங்கள் மூலமாக பயன் அடைந்த கைதிகள் குறித்து விவரங்களை தமிழக அரசும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.