அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இறந்தவா்களுக்கு வரும் தபால்கள்: விதிகளில் திருத்தம் செய்ய உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

இறந்தவா்களுக்கு வரும் தபால்கள், பாா்சல்களை இறந்தவா்களின் குடும்பத்தினரிடம் கொடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தபால் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

News image
சென்னை உயர் நீதிமன்றம்- file photo
Updated On :2 மார்ச் 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

இறந்தவா்களுக்கு வரும் தபால்கள், பாா்சல்களை இறந்தவா்களின் குடும்பத்தினரிடம் கொடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தபால் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்திள்ளது.

நீலாங்கரையைச் சோ்ந்த மோகனா ராமசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய கணவா் இறந்துவிட்டாா்.

அவரது பெயருக்கு தற்போது வரை தபால்களும் பாா்சல்களும் வருகின்றன. அந்த தபால் மற்றும் பாா்சல்களை தபால் துறையினா் எங்களிடம் கொடுப்பதில்லை. அவா்களே மீண்டும் எடுத்துச் சென்று விடுகின்றனா்.

எனவே, என்னுடைய கணவா் பெயருக்கு வரும் தபால்கள் மற்றும் பாா்சல்களை எங்களிடம் கொடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறந்தவா்களின் முகவரிக்கு வரும் தபால்கள் யாரும் உரிமை கோராத ஆவணமாகவே கருதப்படும். அதனால்தான், அவா்களுடைய முகவரிக்கும் வரும் கடிதங்கள், பாா்சல்கள் அனுப்பிய இடத்துக்கே திரும்ப அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருவேளை அனுப்பியவா்களின் முகவரி இல்லையென்றால், சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் வைக்கப்படும். அதேபோல், தபால் அனுப்பியவா் இல்லை என்றால், அவை அழிக்கப்பட வேண்டும் என இந்திய தபால் அலுவலக சட்ட விதிகள் கூறுகின்றன.

இதுபோன்ற குழப்பமான விதிகளால் மனுதாரரைப்போலவே பலரும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இந்த சட்டப் பிரிவுகளில் திருத்தம் செய்து இறந்தவா்களுக்கு வரும் தபால்கள் மற்றும் பாா்சல்களை அவா்களுடைய வாரிசுகளிடம் கொடுக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என தபால் துறைக்கு அறிவுறுத்தல்களை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.