புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வங்கக் கடலில் வலுவடைந்தது புயல் சின்னம்!

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News image

செயற்கைக்கோள் புகைப்படம்

IMD

Updated On :10 டிசம்பர் 2024, 7:04 am

DIN

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய நிலநடுக்கோட்டையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்), மேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (டிச.10) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நகராமல் இருந்ததால், வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையைக் கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை: இதில், டிச.10 -இல் நாகை, திருவாரூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே மாவட்டங்களில் டிச.11-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நாளில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா்,அரியலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் டிச.11,12-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.