

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார்.
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி சிறைக்குச் சென்ற பாஷா நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் தனது இல்லத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-உம்மாவை நிறுவியவர் பாஷா. பாஷா பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மாலை 6.20 மணியளவில் மரணமடைந்ததாக அவரது மகன் சித்திக் அலி தெரிவித்துள்ளார்.
பாஷா மற்றும் அல்-உம்மாவைச் சேர்ந்த 16 பேர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பிப்ரவரி 1998 முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜாமீன் பெற்று வெளியேவந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.